பண்டிகைக் காலத்தில் போலி நாணயத் தாள்கள் புழங்குவதால் பணப் பயன்பாட்டின்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். மோசடிக்காரர்கள் பண்டிகைக் காலத்தில் போலி நாணயத் தாள்களை சந்தைக்கு விட முயற்சிப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது, மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒழுங்கில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் கடந்த தினங்களில் நகரங்களை அண்டியதாக கடுமையான வாகன நெருக்கடியை கவனிக்க முடிந்தது. இவ்வாறு ஒழுங்கீனமாக வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு வைபவங்களை ஒழுங்கு செய்யும்போது பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்துமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும்போது பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும். புத்தாண்டு வர்த்தக கண்காட்சிகளை ஒழுங்கு செய்யும்போது பொலிசாரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், சனப்புழக்கம் அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது திருடர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் கேட்டுள்ளனர்.