பண்டிகைக் காலத்தில் மோசடிகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் மோசடிக்கார வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் பற்றிய முழுமையான பொறுப்பு உரிய வர்த்தகர்களுக்கு காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை தமது விருப்பத்திற்கு ஏற்ற முறையில் அதிகரிக்க முடியாது என்றும் அதிகாரசபை அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் வர்த்தகர்களால், நுகர்வோருக்கு ஏற்படுத்தப்படும் சிரமங்கள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யலாம். தொலைபேசி இலக்கம் 1977 என்பதாகும்.