பண்டிகைக் காலத்தில கேசிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என லிற்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொள்வனவுக் கோரிக்கை விடுக்கப்பட்ட ஒரு தொகை கேசை நாட்டிற்குக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதினால் கடந்த காலத்தில் சந்தைக்கு கேஸ் விநியோகிப்பது வரையறுக்கப்பட்டது. குறித்த கேஸ் தொகை தற்போது நாட்டை அண்மித்துள்ளது. ஆகையினால், நாளாந்தம் ஒரு லட்சம் கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
