அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஒருபோதும் கட்சியின் கொள்கைகளை காட்டிக்காடுக்கப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ரீதியான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எந்தவொரு தேர்தல்களிலும் வெற்றிபெறும் வல்லமை கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் பொருளாதார நெருக்கடி என்ற விடயத்தை பயன்படுத்தி வருவதாக ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை தீர்பப்தற்கான யோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்க விழுமியங்களை மதித்த செயற்படு:ம் அரசியல் கட்சியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். தமது கட்;சிக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது என்று அவர் வலியுறுத்தினார்.