பதுளை தல்தென இளைஞர் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஒன்பது கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார் இந்த மத்திய நிலையத்தில் சிறிய தவறுகள் மற்றும் குற்றங்களில் தொடர்புடைய இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.