பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினால், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருக்கு அழைப்பு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்துவ அமைப்பான சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் துரையப்பா காத்தவராஜன் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை 28ஆம் திகதி காலை அம்பாறை மாவட்டத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு வருகை தருமாறு கையடக்கத் தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருஙக்pணைப்பாளரும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய கண்டுமணி லவகுசராசா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கண்டுமணி லவகுசராசா,
துரையப்பா காத்தவராஜன் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு
மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டஙக்ளிலும் இடம்பெற்றுவரும் “வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் மக்கள் குரல் 100 நாட்கள் செயல்முனைவு கனனயீர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துவரும் எமது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்துவ அமைப்பான சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தராவார்.
இது தொடரப்hக உரிய அம்பாறை மாவட்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் திரு. நவராஜ் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அமைச்சிலிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகவே நாங்கள் உங்களை விசாரணை செய்ய வேண்டும் எனவும் கையடக்கத் தொலைபேசி ஊடாக தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 26ஆம்திகதி காலை 10.30மணியளவில் என்னைத் தொடரபு; கொண்டு எமது நிறுவனத்தின் அமைவிடம் மற்றும் விலாசம் தொடர்பாக விசாரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக எமது அங்கத்துவ அமைப்பினை உத்தியோகத்தர் துரையப்பா காத்தவராஜன் அவர்கள் உரிய அம்பாறை மாவட்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு எதிர்வரும் 28.09.2022 விசாரணைக்காக செல்கின்றார் என்பதனையும் குறிப்பிடுகின்றோம்.
எனவே கடந்த சில காலமாக எம்மைப்போன்ற பல சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இவ்வாறான அழைப்புக்கள் தொலைபேசி ஊடாகவும், அழைப்புக் கடிதங்கள் ஊடாகவும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டு இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் இடம்பெற்றுக் கொணடு வருவதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும் என்று தெரிவித்துள்ளார்.
AR