பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல் குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

கருப்பு ஜூலையை அடிப்படையாகக் கொண்டு இன்றும், நாளையும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் சாத்தியம் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், குழப்பம் அடையாமல் வழமை போன்று நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களை கேட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள கடிதம் உளவுப் பிரிவு உறுதிப்படுத்தாத தகவலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
