பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனம் 250 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தூய லாபத்தை ஈட்டியுள்ளது

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தில் பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வரிக்கு முந்திய தூய வருமானம் 250 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என அதன் தலைவர் சுதேஷ் நந்தசிறி தெரிவித்துள்ளார். இதற்கு இணைவாக இந்த வருடத்தில் மேலும் பல செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வருமானத்தின் ஊடாக அடுத்த வருடம் பரந்தனில் கைத்தொழில் நகரம் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் கோஸ்ரிக் சோடா மற்றும் குளோரின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
