பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும் பண்டிகைக் காலத்திலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும் பண்டிகைக் காலத்திலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. இதன்படி, டிசெம்பர் மாதம் வரை மின்கட்டண அதிகரிப்பு தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஓகஸ்ட் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மின்சார சபை சுமார் ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம் தற்போதைய செலவினத்தை ஈடுசெய்ய முடியும். இதேவேளை, எதிர்வரும் ஆறாம் திகதி மற்றுமொரு நிலக்கரிக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளது. ஏற்கனவே ஐந்து நிலக்கரிக் கப்பல்கள் நாட்டிற்கு வந்துள்ளன.
