பருவப்பெயர்ச்சிக் காலநிலை காரணமாக டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகரிப்பு.

பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 149 ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், கடந்த வருடம் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 5 ஆயிரத்து 583 தொற்றாளர்களே இனங்காணப்பட்டதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுகத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களில் நாடளாவிய ரீதியில் பதிவான தொற்றாளர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளார்கள். கண்டி, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா,; கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார்.
