இந்தியாவின் 75 ஆவது சுகந்திர தினத்தினை முன்னிட்டு பலாலியில் அமைந்துள்ள உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவுத தூபியில் நினைவு கூறல் இடம்பெற்றது.
1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரையான காலப்பகுதிகளில் இலங்கையில் விடுதலைப்புலிகளிற்கு எதிராக இடம்பெற்ற ‘ஒப்பரேசன் பவன்’ மற்றும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் உயிரிழந்த இந்திய அமைதிப்படையின்(IPKF) இராணுவ வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணத்திற்;கான இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஸ் நட்ராஜ் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஜயசுந்தர உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
TL