பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, துணைவேந்தர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மருத்துவ பீடங்கள் மற்றும் துணை சுகாதார பீடங்களின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருகின்றன.
