மேலும் பல்வேறு இறக்குமதிப் பொருட்களுக்கான வரையறை தளர்த்தப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிற்றிய தெரிவித்துள்ளார். சுங்கப் பிரிவின் உயர்ந்த பட்ச வருமான இலக்கை அடைந்து கொள்ள இது வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறினார். சுங்கத் திணைக்களம் இந்த வருட முதல் மூன்று மாதங்களில் 27 கோடி ரூபாவை வருமானமாக ஈட்ட எதிர்பார்த்திருந்தாலும் திணைக்களத்தின் வருமான 12 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.