பாகிஸ்தானி;ல் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 42 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் காணாமல் போயுள்ளனர். இந்த பஸ், பாகிஸ்தான் – பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்றின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து, வெடித்து, தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பெருவின் தலைநகர் லிமாவில் சுற்றுலாப் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த பஸ் ஆர்கனோஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான வீதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தது, மலையிலிருந்து உருண்டு கீழே வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.