பாக்கிஸ்தானின், பெஸாவர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 வரை அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் அன்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அதி-உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசலுக்குள் எவ்வாறு குண்டுதாரி நுழைந்தார் என தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தாக்குதலை பாக்கிஸ்தானின் தாலிபான்கள் நடத்தியதாக ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த அமைப்பு அதனை நிராகரித்துள்ளது.