அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலைத் தவணை மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகும்.
இதனிடையே, 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 17ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
திகதிகள் தீர்மானத்ததன் பின்னர், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகளின் விபரங்கள் வெளியிடப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.