Home » பாடசாலைகளில் இருந்து பாடல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை

பாடசாலைகளில் இருந்து பாடல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை

Source
Share Button

பாடசாலைகளில் இருந்து பாடல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று நண்பகல் 12 மணிக்கு கொழும்பு றோயல் கல்லூரியில் இருந்து இந்தப் பாடல் நிகழ்ச்சி நேரலையாக ஒலிபரப்பப்படும். சிற்றி எவ்.எம். மற்றும் சிங்கள வர்த்தக சேவைகளில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழச்சியின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் கொழும்பு விசாகா கல்லூரியில் இடம்பெறும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image