பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை தவிர்ப்பதற்கான ஒரு செயலணியை உருவாக்க அரசாங்கம் கவனம்

பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை தவிர்ப்பதற்கான ஒரு செயலணியை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மேல் மற்றும் தென்மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. வருடாந்தம் இலங்கையில் கைப்பற்றப்படும் ஹெரோயின் போதைப்பொருளின் அளவு சுமார் 2 ஆயிரம் கிலோ கிராம்களாகும்.
