பாடசாலைகள், பல்ககைகழகங்களில் போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கான செயலணி அமைக்கப்படவுள்ளது

பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், பாடசாலைகள் எனபனவற்றில் ஐஸ் உட்பட போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. நச்சுத் தன்மை சார்ந்த போதைப்பொருள் மற்றும் அபாயகரமான மருந்துப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணி என்ற பெயரில் இது அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டுத்தில் இது தொடர்பான யோசனை முன்மொழியப்பட்டது. நச்சுத் தன்மை சார்ந்த போதைப்பொருள், அபாயகரமான மருந்துப் பயன்பாட்டை தடுப்பதற்கான செயலணியை துரிதமாக ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, டிரால் அலஸ் ஆகியோருக்கு பணிப்பரை வழங்கியுள்ளார். இதேNவேளை, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பனவற்றுக்குப் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கின்றது என்பது பற்றியும் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுத்தல் வழங்கியுள்ளார்.
