மாணவர்களின் நலன்கருதி உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைந்துகொள்ளத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், ஜனாதிபதியுடனான் பேச்சுவார்த்தையின் பின்னரே இ;நதப் பணிகளில் இணைந்துகொள்ள இருப்பதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தினம் கிடைத்தவுடன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைந்துகொள்ளும் தினம் பற்றி தீர்மானிக்கப்படவுள்ளது. சங்கத்தின் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை. ஆனால், மாணவர்களின் நலன்கருதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.