பாடசாலை மாணவர்களுக்கும், சிரேஷ்ட பிரஜைகளுக்கும் எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் மிருகக்காட்சிசாலைகளை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கும், சிரேஷ்ட பிரஜைகளுக்கும் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் மிருகக்காட்சிசாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கென மிருகக்காட்சிசாலைகளில் இலவச நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவசமாக மிருகக்காட்சிசாலைகளைப் பார்வையிடலாம். நத்தார் தினத்தன்று மிருகக்காட்சிச்சாலைகளில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
