Home » பாடசாலை வாகனங்களுக்கான கட்டணம் குறைப்பு ; முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் இல்லை!

பாடசாலை வாகனங்களுக்கான கட்டணம் குறைப்பு ; முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் இல்லை!

Source
எரிபொருள் விலை திருத்தம் இடம்பெற்றிருந்தாலும் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு குறித்து பரிசீலிக்க முடியாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. அண்மையில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இம்முறை மேற்கொள்ள முடியாதென முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் கூறியுள்ளன. குறைக்கப்பட்ட எரிபொருள் விலையுடன் பாடசாலை வேன் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெற்றோர் சோர்ந்து போயுள்ளதால், சமீபத்திய எரிபொருள் விலைக் குறைப்பின் பலனை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். N.S
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image