பாராளுமன்றம் இன்று 9.30ற்கு மீண்டும் கூடவுள்ளது. கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் இன்று விவாதிக்கப்பட இருக்கின்றன. அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளைகளும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன.
இதேவேளை, அத்தியாவசிய மக்கள் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய சில தேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகம், மசகெண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதார சேவை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.