பாராளுமன்றத்தில்; முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

நாட்டில், நீண்டகால முறமை மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேயவர்த்தனவுக்கு இதுபற்றி எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற பிரேரனைகளை அமுல் படுத்தும் போது எதிர்கொள்ளும் தாமதம் இதற்கு பின்னனியாக அமைந்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான யோசனைகளில் தேசிய சபையை அமைக்கும் யோசனை மாத்திரம் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
