Home » பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

Source
Share Button

.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து, அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும்  ஓகஸ்ட் 3ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர்  நிறைவடைவதோடு, 9 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள்  தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image