பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு இன்று கூடவுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட இருக்கின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு பற்றி தேர்தல் ஆணைக்குழு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.