பாராளுமன்ற வீதிகளின் ஆர்ப்பாட்டங்களை தடுக்க நீதிமன்றத்திடம் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளன

பாராளுமன்றத்ததை அண்டிய வீதிகளில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கலாம் என்று வெலிக்கடை பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14 பேர் உள்ளிட்ட மேலும் சிலருக்கு அந்தப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடைவிதித்துள்ளது.
வசந்த முதலிகே, உள்ளிட்டவர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையை கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
