ஒரு நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுப்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். ஒழுக்கமான சமூகத்தால் இலங்கையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலைக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரந்தம்பேயில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்;டார்.
இதேவேளை, மல்வத்து மற்றும் அஸ்கிரிய தரப்பினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை உடனடியாக நியமித்து பல்கலைக்கழகத்தை சர்வதேச பௌத்த கற்கை மையமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். பிரிவெனாக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது இன்றியமையாதது.
இதுதொடர்பான பிரேரணை நிச்சயமாக அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பௌத்த மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் 2023ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை அரசாங்கத்தின் அனுசரணையில்; நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.