Home » பாலைவனமாதலை தவிர்க்கும் மற்றும் வரட்சியை ஒழிக்கும் சர்வதேச தினம் இன்றாகும்

பாலைவனமாதலை தவிர்க்கும் மற்றும் வரட்சியை ஒழிக்கும் சர்வதேச தினம் இன்றாகும்

Source
Share Button

பாலைவனமாதலை தவிர்க்கும் மற்றும் வரட்சியை ஒழிக்கும் சர்வதேச தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் 1994ஆம் ஆண்டு இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. 194 நாடுகள் இது தொடர்பான சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை 1998ஆம் ஆண்டு இதில் கை;சசாத்திட்டது. பூமியில் 70 தசம் 9 சதவீதமான பகுதி நீரினால் மூழ்கியுள்ளது. 29 தசம் ஒரு சதவீதமான நிலப்பரப்பே காணப்படுகின்றது. இதிலும் 33 சதவீதமான பகுதி பாலைவனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பூமியில் ஒரு கோடி 20 லட்சம் சதுர கிலோ மீற்றர் பாலைவனமாக காணப்படுகின்றது. காலநிலை மாற்றமும் மனித செயற்பாடுகளும் இதற்குக் காரணமாகும். நிலத்தில் சுமார் 41 சதவீதமான பகுதி தற்போது உலர் நிலமாக காணப்படுகின்றது. சுமார் 200 கோடி மக்கள் இந்த நிலப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image