நாட்டின் பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களினதும், பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலைக் கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.