Home » பிரித்தானியாவின் புதிய பிரதமரின் கீழ் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை

பிரித்தானியாவின் புதிய பிரதமரின் கீழ் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை

Source
Share Button

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனாக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சுனாக் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பு வாய்ந்த பிரதமர் பணியை நிறைவேற்றுவதற்கு அவரது அனுபவம் உதவியாக அமையும் என்றும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையும் பிரித்தானியாவும் பாரம்பரிய வரலாற்றுத் தொடர்புகள் கொண்ட நாடுகளாகும். இருதரப்புக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பிரித்தானியாவின் புதிய பிளற்றினம் என்ற வேலைத்திட்டத்தின் மூலம் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image