பிரித்தானியாவின் மகாராணி காலமானார்

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இவரின் இழப்பிற்காக அனுதாபத்தை வெளியிடும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். ஜனாதிபதி மகாராணியின் உயிரிழப்புக் குறித்து பிரித்தானிய அரச குடும்பத்திற்கும் அந்நாட்டிற்கும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
