பிரித்தானிய மகா ராணியார் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்

பிரித்தானியாவின் எலிசபெத் மகா ராணியார் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. மகா ராணியாரின் உடல் நிலை பற்றி பரிசோதனைகளை மேற்கொண்டு வைத்தியர்கள் அவரை மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள். தற்சமயம் எலிசபெத் மகா ராணியார் பள்மோறல் அரண்மனையில் தங்கியிருப்பதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளார்கள். இளவரசர் சாள்ஸ் மகா ராணுpயாரோடு உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் எலிசபெத் மகா ராணியார்க்கு தற்சமயம் 96 வயதாகிறது.
