Home Against Tamileelam பி.பீ.ஜயசுந்தர பதவி விலகுகிறார்!

பி.பீ.ஜயசுந்தர பதவி விலகுகிறார்!

Source

நீர்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் திட்டமொன்றிற்கு எதிராக தலையீடு செய்தமையால் ஏற்பட்ட குடும்பச் சிக்கலில் மாட்டிய பி.பீ. ஜயசுந்தர பதவி விலகுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டு பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விடுத்த வேண்டுகோளின் பேரிலியே அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.பீ.ஜயசுந்தரவின் பதவி விலகலுடன் வெற்றிடமாகும் அப்பதவிக்கு பிரதமரின் செயலாளராக கடமையாற்றும் ராஜபக்ஷ குடும்ப உறவினரான காமினி சேதர செனரத் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

எவ்வாறாயினும், காமினி செனரத் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகும் பிரதமரின் செயலாளர் பதவிக்கு நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக நியமிக்கப்படவுள்ளார்

இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளில் ஒருவரான காமினி செனரத் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி அலுவலர்களின் தலைவராக செயற்பட்டு மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவராவார்.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image