புதிதாக ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

அடுத்த வாரம் அளவில் புதிதாக ஆயிரம் பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பி;ட்டார். இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக புதிதாக 100 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்திற்காக தற்போது பாரிய கேள்வி நாட்டில் நிலவுகிறது. எனினும், அதற்குத் தேவையான அளவு பஸ்கள் இல்லை எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
