புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இஸ்ரேலிய அரசியல் கட்சிகளிடையில் கலந்துரையாடல்

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஓதர்டொக்ஸ் மற்றும் வலதுசாரி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுடன் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை வெளியான தேர்தல்களின் உத்தியோகபூர்வ முடிவில் 120 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஓதர்டொக்ஸ் கட்சி 18 ஆசனங்களையும், 14 ஆசனங்களை சியோனிசம் கட்சியும் வென்றுள்ளன. அதன்படி, நெதன்யாகுவை ஆதரிக்கும் வலதுசாரிக் குழு 64 ஆசனங்களை வெற்றுள்ளன.
