புதிய இடைக்கால அரசாங்கம் தொடர்பான ஆவணத்தை தேசிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ளது

தற்போதைய அரசாங்கம் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்ற நிலையில், அமைக்கப்படவுள்ள புதிய இடைக்கால அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான ஆவணத்தை தேசிய சுதந்திர முன்னணி இன்று வெளியிடவுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் அரசாங்கம் முதலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவங்ச, தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தனது திட்டக் கொள்கையை முன்வைக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் பேரவையை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு முன்வைக்கவும், நாட்டில் அராஜகங்களைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரேரணைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் புதிய ஜனாதிபதிக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
