புதிய தேர்தல் முறையை தயாரிப்பது தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கும் வகையில், தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளைக் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையை இதன் மூலம் முன்மொழிந்துள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இளைஞர் பிரதிநிதிகளுக்கு கூடுதலான வாய்ப்புக்களை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கியிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
