புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்திற்கான திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்;டமை, முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்திற்கான திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை, முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மின்சார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், கஞ்சன விஜேசேகரவின் அர்ப்பணிப்பை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
