புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் காணியில் நேற்றுப் புதையல்தோண்டிய தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஆனந்தபுரம் இறுதிப் போர் நடைபெற்ற பகுதி. விடுதலைப்புலிகளின் தங்கங்கள் இந்தப் பகுதியில் இருப்பதாகத் தெரிவித்து தென்பகுதியைச் சேர்ந்த பலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த காலங்களில் கைதாகியிருந்தனர்.
இந்த நிலையில் தனியாருக்குச் சொந்தமான வெறும் காணியில், உரிமையாளர் அங்கு இல்லாத நிலையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் இவர்கள் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் காணியில் இரு இடங்களில் புதையல் தோண்டப்பட்டுள்ளது. அவ்வாறு தோண்டும்போது அருகிலிருந்த இராணுவமுகாம் சிப்பாய்களின் கண்ணில் பட்டுள்ளதைத் தொடர்ந்து இராணுவத்தினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸ் குழு புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைதுசெய்துள்ளார்கள்.
கொக்கிளாயைச் சேர்ந்த தமிழர்கள் 3 பேரும் மற்றும் யாஎல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி ஆகிய இடங்களைச் சேர்ந்த சிங்களவர் நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.
……………………..