புத்த ரஷ்மி தேசிய வெசாக் நிகழ்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டல் வளாகம், ஜனாதிபதி செயலக வளாகம் என்பனவற்றில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இன்றும் நாளையும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மீண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் ஒழுங்கு செய்துள்ள பக்திப் பாடல் நிகழ்ச்சி இன்றிரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். ஜனாதிபதி செயலக வளாகத்தில் நாளையும் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.
ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 200 பாடசாலை மாணவர்களுக்கு நாளை மறுதினம் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.