புறக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெறவிருந்த பாதயாத்திரை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

சர்வமதத் தலைவர்களின் பங்களிப்போடு இடம்பெறவிருக்கும் பாதயாத்;திரை தொடர்பான நீதிமன்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. புறக்கோட்டை பிரதேசத்தில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரை பற்றி புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்ததன் பின்னர் இது தொடர்பான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பாதயாத்திரையில் பங்கேற்பவர்கள் ஓல்கொட் மாவத்தை, போதிருக்காராம விஹாரை வளாகம், புறக்கோட்டையின் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் போன்ற இடங்களுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நடைபவனியை மேற்கொள்வோர் வாகனங்கள் பயணிக்கும் இடங்களுக்கும் பொதுமக்கள் பயணிக்கும் நடைபாதைகளுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
