பூகம்பம் – 250ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 250ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஆப்கானிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை அறிவித்திருக்கிறது. இன்று காலை ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியினால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 6.1 ரிச்டராக இந்த பூகம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 119 மில்லியனுக்கும் அதிகமானோர் பூமி அதிர்ச்சியை உணர்ந்திருப்பதாக ஐரோப்பாவின் நில ஆய்வு மத்திய நிலையம் அறிவித்திருக்கிறது.
