Home » பெண்கள், யுவதிகள் மத்தியில் ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பெண்கள், யுவதிகள் மத்தியில் ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Source
Share Button

பெண்கள் மத்தியில் ஐஸ் எனப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அந்தச் சபையின் உதவி ஆலோசகர் லக்மி நிலங்கா இதனைக் குறிப்பிட்டுள்ளார். அழகு நிலையங்கள் மூலம் பல பெண்கள் மற்றும் இளம் பெண்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக குளியாப்பிட்டிய மதுவரித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகள் பலர், அழகு நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்து பயன்படுத்தக்கூடிய ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குருநாகல் மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image