Home » பெப்.4 இற்குள் 3 விடயங்களில் தீர்வு காண இணக்கம் – வீடியோ

பெப்.4 இற்குள் 3 விடயங்களில் தீர்வு காண இணக்கம் – வீடியோ

Source

ஒரே நேரத்தில் மூன்று விடயங்கள் நடைபெற வேண்டும் என்பது எமது சிந்தனையாகும். இதனை முதலாவது சுற்றுப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டும் இருகின்றார்கள். இந்த மூன்று விடையங்களும், ஜனாதிபதி தானாகவே சொல்லியிருக்கின்ற காலக்கெடு இலங்கை சுதந்திரமடைந்து 75 வது ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடுவதற்கு முன்னதாக  செய்து முடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றிருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்தெரிவித்துள்ளார். 

[embedded content]

மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் எனும்தொணிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு  பெரியகல்லா இந்து கலாசார மண்டபத்தில்நடைபெற்றது. 

இதன்போது கலந்து கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய காலகட்டத்தில சுகாதாரததில் பல்வேறுபட்ட தேவைகள் நிவர்த்தி செய்யப்படாமலிருக்கின்றன. ஆனாலும்சுகாதாரத்துறையில் வேலை செய்பவர்கள் மிகுந்த அற்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைகளில்போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதானது முக்கியமான பிரச்சனை என அனைவருக்கும் தெரியவந்திருக்கின்றது. எமது இளைஞர் யுவதிகளை போதை என்கின்ற அரக்கனிடத்திலிருந்து காப்பாற்றுகின்ற பொறுப்பு அனைவரிடத்திலும் உண்டு. இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் நாம் வேண்டிநிற்கின்றோம். 

ஜனாதிபதியைச் சந்திப்புத் தொடர்பாக எமது அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலே வடகிழக்கிலே அதி உச்ச அதிகாரப் பகிர்வு, உள்ளக சுய நிருணய அடிப்படையில் ஒரு சமஷ்ட்டிக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படல் வேண்டும். என்பதை தெட்டத் தெழிவாகச் சொல்லியிருக்கின்றோம். இதனைக் கேட்டுப் தெரிந்து  கொள்கின்றவர்களுக்கு புரியும். தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவர்களை தட்டி எழுப்ப முடியாது எனவே நாம் வெளிப்படையாக இதனை வெளிப்படுத்தித்தான்பகிரங்கப்படுத்தித்தான் ஜனாதிபதியுடன் நாம் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கின்றோம். 

இவ்விடையங்கள்தான் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தொடற்சியாக இருந்து வருகின்றது. பாராளுமன்றத்திலும்ஜனாதிபதியுடன் நடைபெறுகின்ற பேச்சுவார்தைகளிலெல்லாம் இதனைத்தான் முன்வைத்து நாம் பேச்சு நடாத்துகிறோம். 

இப்போச்சு வார்த்தையில் சமாந்தரமான காணாமலாக்கப்பட்டவர்களின் விடயம், எஞ்சியிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின்விடுதலை,  காணி அபகரிப்பு, விடயங்கள்.

இந்நிலையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசியலமைப்பிலே, சட்டத்திலே இருக்கின்ற விடையங்கள் அமுல்ப்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். 

புதிய அரசியலமைப்பு விடையத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட அடிப்படையில் ஒரு நிரந்தத் தீர்வு காணப்படல் வேண்டும். 

இவை ஒரே நேரத்தில் இவை நடைபெற வேண்டும் என்பதும் எமது சிந்தனையாகும். இதனை முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்ஜனாதிபதியும் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டும் இருகின்றார்கள்.

இந்த மூன்று விடையங்களும், ஜனாதிபதி தானாகவே சொல்லியிருக்கின்ற காலக்கெடு அதவது இலங்கை சுதந்திரமடைந்து 75 வதுஆண்டு நிறைவை அடுத்தவருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடுவதற்கு முன்னதாக  செய்து முடிக்க வேண்டும் என்பதைநாங்கள் முற்று முழுதாக ஏற்றிருக்கின்றோம். அந்தக் காலகட்டத்திற்குள்ளேயே ஒரு இணக்கப்பாடு, ஒரு முடிவு ஏற்பட வேண்டும். என்பதை நாங்கள் நிற்பந்தமாகச் சொல்லியிருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார். 

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்புபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன். விளையாட்டுக்கழ உறுப்பினர்கள், இரத்தநன்கொடையாளர்கள், மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

AR

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image