பெரும்போக நெற்செய்கைக்கு தரமான உரத்தை வழங்கத் தீர்மானம்

2021 பெரும்போகத்தின் போது, சில நிறுவனங்கள் கழிவுப் பொருட்களை சேதனப் பசளையாக விநியோகித்துள்ளமை தெரியவந்துள்ளதாக தேசிய விவசாயிகள் மாநாடு என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த வி;டயம் தெரியவந்துள்ளது. இதனால், இம்முறை பெரும்போகத்தின் போது, தரமான உரத்தை விநியோகிக்குமாறு தேசிய விவசாயிகள் மாநாடு என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
விநியோகிக்கப்படும் உர வகைகளின் தரத்தை தேசிய உர செயலகம் பரிசோதிக்கும் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். உர செயலகத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் உர வகைகளின் மாதிரிகள் அடிக்கடி பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். சேதனப் பசளை கொள்வனவிற்காக ஒரு விவசாயிக்கு 20 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் மாநிய உதவி வழங்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் அமரவீர இதன்போது குறிப்பிட்டார்.
