பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உரம் இன்றில் இருந்து விவசாய மத்திய நிலையங்களின் ஊடாக விநியோகம்

இம்முறை பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான முழுமையான யூரியா உரம் இன்றில் இருந்து சகல விவசாய சேவை மத்திய நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்த 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பலை பார்வையிட்ட அமைச்சர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமேர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர்களும் இதன் போது பிரசன்னமாக இருந்தனர்.
