பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா உரம் தொடர்ந்தும் வழங்கப்பட இருக்கின்றது

எதிர்வரும் பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரத்திற்கு மேலதிகமாக மியுரியேற் ஒவ் பொட்டாஸ் எனப்படும் உரம் விநியோகிக்கப்பட இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று இந்த உரம் வழங்கப்பட இருக்கின்றது. இதற்கென 2 கோடி 50 ஆயிரம் டொலர்களை ஒதுக்க விவசாய நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய கமநல கூட்டமைப்பின் மாவட்ட பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற நெற்பயிர்ச்செய்கை தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் இது பற்றிக் கருத்து வெளியிட்டார். எதிர்வரும் பெரும் போகத்திற்குத் தேவையான யூரியா உரத்தின்பெறுமதி 11 கோடி அமெரிக்க டொலர்களாகும். இதனை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி நிதி உதவி வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
