பெரும்போக விவசாயத்திற்கு தேவையான யூரியா உரம் குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது

.
பெரும்போக விவசாயத்திற்கு தேவையான யூரியா உரம் குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கும் தற்போது உரம் கிடைத்துள்ளன. கிழக்கு மாகாணத்திற்கு தேவையான யூரியா உரத்தை தற்போது பகிர்ந்தளிப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 50 கிலோவை கொண்ட யூரியா மூடை ஒன்று நெற்செய்கையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, சோளச் செய்கை மேற்கொள்ளும் 5 மாவட்டங்களுக்கு யூரியா உரத்தை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
