பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகை

பெற்றோல் கப்பல் ஒன்று இன்று இலங்கையை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் நேற்று நாட்டை வந்தடைய இருந்தது. எனினும், அதன் பயணம் ஒருநாளால் தாமதடைந்தது. இன்றும் வரையறுக்கப்பட்ட அளவில் பெற்றோல் நாடு முழுவதிலும் பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டோ டீசல் முழுமையான அளவிலும் சுப்பர் டீசல் வரையறுக்கப்பட்ட அளவிலும் பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
